ஆட்சியாளர்களையும், ஆளும் கட்சியையும் பொருட்படுத்தாமல் பாகிஸ்தான் எப்போதுமே இந்தியாவுக்கு எதிரான ஒரே ஒரு பிசாசான பயங்கரவாதத்தை தூண்டுகிறது. அந்த பயங்கரவாத விபத்தால் அது மிகவும் பாதிக்கப்படுகின்ற போதிலும் இது பாகிஸ்தானின் ஒரே நோக்கம். தங்கள் மோசமான செயலிலிருந்து பல மோசமான விளைவுகளை எதிர்கொண்ட பிறகும் அவர்களின் மனதில் எந்த மாற்றமும் இல்லை. இது முழு துணைக் கண்டத்திற்கும் கடுமையான சாபமாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு நிதி நடவடிக்கை பணிக்குழு 27 புள்ளிகள் கொண்ட செயல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் பயங்கரவாதத்திற்கு நேரடியான ஆதரவுக்கு எதிராக 27 கடுமையான பிரச்னைகள் நேராகக் கூறப்பட்டுள்ளன. பாகிஸ்தான் அந்த செயல் திட்டத்தை சிறிதும் பொருட்படுத்தவில்லை. அதனால் FATF regional affiliate asia pacific team 2019 ஆகஸ்டில் பாகிஸ்தானை கறுப்புப் பட்டியலில் சேர்க்குமாறு கடுமையாக பரிந்துரைத்தது. FATF சாம்பல் குறியீட்டில், அதிக முன்னுரிமையில் பாகிஸ்தானை பட்டியலிட்டுள்ளது. அந்த பட்டியலில் குறைந்தது 22 சிக்கல்களை உடனடியாக செயல்படுத்த கண்டிப்பாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த முறையீட்டிற்கு பாகிஸ்தான் பதிலளிக்கவில்லை. அதனால், ஈரான் மற்றும் வட கொரியா போன்று உடனடியாக பாகிஸ்தானையும் கறுப்புப் பட்டியலில் FATF சேர்க்க முயல்வதற்கு பதிலாக அதன் கோரிக்கைபடி அதற்கு மேலும் நான்கு மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.
இந்த கோரிக்கைக்கு பாகிஸ்தான் இப்போது பதிலளிக்கவில்லை என்றாலும், அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை கெடு கொடுத்து FATF-ன் தலைவர் கியாங் மின் லீ ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார். 37 உறுப்பினர்கள் மற்றும் இரண்டு பிராந்திய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான FATF தலைவர் பதவி கடந்த ஜூன் மாதம் சீனாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு காரணத்திற்காகவும் அந்த தொழிற்சங்கத்தில் உள்ள மூன்று நாடுகளும் ஆதரிக்காவிட்டால் பணிக்குழு தீர்மானத்தை பின்வாங்க வேண்டும். சீனா, துருக்கி மற்றும் மலேசியா உதவியுடன் இஸ்லாமாபாத் தற்காலிகமாகத் தடை செய்யப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளது. எதிர்வரும் நான்கு மாதங்களில் பயங்கரவாத நடவடிக்கைகளை கண்டனம் செய்வதற்கான செயல் திட்டத்தை செயல்படுத்தப் போகிறதா, இல்லையா என்பதைக் காண உலகம் காத்திருக்க வேண்டும்.
மூன்று தசாப்தங்களுக்கு (முப்பது ஆண்டுகள்) முன்னர் நடைபெற்ற ஜி -7 உச்சிமாநாட்டி, அங்கீகரிக்கப்படாத நிதி செலவீனமானது. வங்கி முறையையும், நாடுகளின் நிதி ஸ்திரத்தன்மையையும் கடுமையாக பாதிக்கிறது என்பதை அங்கீகரித்துள்ளது. பண மோசடிகளை கட்டுப்படுத்துவதற்கான உறுதியான குறிக்கோளுடன் இது FATF-ஐ அமைத்துள்ளது. 1990ஆம் ஆண்டில், முதல் அறிவுறுத்தல்களுடன் உறுதியான அர்ப்பணிப்புடன் பணிக்குழு தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. மேலும், அது அவ்வப்போது சுயமாக செயல் திட்டத்தை மெருகூட்டுகிறது. அனைத்து நிதி ஆதாரங்களையும் நிறுத்துவதன் மூலம் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நோக்கத்துடன், அதைச் செய்வதற்கான பணியை FATFக்கு 2001ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பயங்கரவாதத்திற்கு நிதி வழங்குவதற்கான கட்டுப்பாடுகள் குறித்து, உருவாக்கப்பட்டுள்ள ஒன்பது பரிந்துரைகள் சிறப்பாக விதிக்கப்பட்டுள்ளன. அனைத்து நாடுகளும் கீழ்ப்படிந்து ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய சர்வதேச தரங்களுடன் கடுமையான வழிகாட்டுதல்களாக இது உள்ளது.
இதன் விளைவாக 2012 - 2015க்கு இடையில் முதன்முறையாக பாகிஸ்தான் தொடர்ந்து FATF இன் சாம்பல் குறியீட்டில் முதலிடத்தில் உள்ளது. மீண்டும் இந்த ஆண்டு ஜூன் மாதத்தின் கடைசி வாரத்தில் அதே பட்டியலில் உள்ளது. சரியான நடவடிக்கைகளை எடுத்த போதிலும், சில தந்திரங்கள் மூலம் சர்வதேச சமூகத்தின் கவனத்தை திசை திருப்ப பாகிஸ்தான் நிறைய முயற்சித்தது. ஆனால் பாகிஸ்தான் அந்த பணியில் தோல்வியடைந்தது. இதனால் ஜமாத் உத் தவா என்ற பயங்கரவாதக் குழுவைத் தடைசெய்ததுடன், அனைத்து பயங்கரவாதக் குழுக்களுக்கும் நிதி வருவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டது போலவும், சர்வதேச அளவில் அது குறித்து ஒரு பெரிய பிரசாரத்தை மேற்கொண்டதாகவும் பாசாங்கு செய்துள்ளது. சில மாத காலத்திற்குள் அந்த மாபெரும் நாடகத்தின் பின்னணியில் உள்ள பாகிஸ்தானின் உண்மையான நோக்கங்கள், அதன் நேர்மை உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த ஜூலை மாதம் பாகிஸ்தான் நிலத்தில் போராளிக் குழுக்களை கட்டுப்படுத்தி நிராயுதபாணியாக்கிய முதல் மற்றும் முதன்மையான அரசாங்கம் என்று அறிவித்தார். எந்த நேரத்திலும் அவரே அதற்கு முரணான அறிக்கையை வெளியிடவில்லை. சுமார் 30 முதல் 40 ஆயிரம் பயங்கரவாதிகள் தங்கள் நிலத்தில் இன்னும் இருப்பதாக அறிவித்தனர். உலகப் புகழ்பெற்ற பயங்கரவாதி மசூத் அசாரின் ஓய்வூதியத் திட்ட விண்ணப்பத்தை ஏற்ற பெருமையையும் இம்ரான் அரசு பெற்றுள்ளது.
சமீபத்தில் FATF உச்சிமாநாடு இலங்கை, துனிசியா மற்றும் எத்தியோப்பியாவை சாம்பல் பட்டியலில் இருந்து நீக்கி, ஐஸ்லாந்து, மாக்னோலியா மற்றும் ஜிம்பாப்வே ஆகியவற்றை சேர்த்தது. இந்தியாவைப் போர் மூலமாகவும், நிதி மூலமாகவும் தோற்கடிக்க பாகிஸ்தான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பனிப்போரில் ஈடுபட்டுள்ளது. அதற்காக அது பயங்கரவாத குழுக்களை பெரிதும் ஊக்குவித்துள்ளது. இதன் விளைவாக ’வினை விதைத்தவன் வினை அறுப்பான்’என்பது போல, அதுவே பலியாகிவிட்டது. மேலும் தனது போக்கால் மிக பெரிய திவால் நிலையை எட்டியுள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாத வெளியுறவுக் கொள்கைக்கு முக்கியத்துவம் தருகிறது. இதன் விளைவாக அந்த நாட்டின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் இன்று கடுமையான வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 மில்லியன் ரூபாய் கடன், 3 லட்சத்து 40 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதிப் பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ஒரு வருட காலத்தில் 3,300 மில்லியன் டாலர்களாகக் குறைந்துள்ளது. இதன் விளைவாக தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவிகிதம் சரிவு ஏற்பட்டது. விவசாய வளர்ச்சி இன்று ஒரு சதவிகிதம் கூட இல்லை, பணவீக்க விகிதம் 13 முதல் 15 சதவிகிதம் வரை மோசமாக இருக்கிறது.
இவை அனைத்தும் பாகிஸ்தானின் சரிந்த பொருளாதாரத்தின் உண்மையான புள்ளிவிவரங்கள். சர்வதேச நிதியம் இடைக்கால நிவாரணமாக வழங்கிய 600 பில்லியன் டாலர் கடன் உண்மையில் வரமா அல்லது அந்த நாட்டுக்கு ஒரு சாபமா என்ற குழப்பமான நிலையில் இப்போது பாகிஸ்தான் உள்ளது. இது FATF-ன் வழிகாட்டியை செயல்படுத்தப் போவதில்லை என்றால், அது வார்த்தைகளில் விவரிக்க முடியாத பல சிக்கல்களை எதிர்கொள்ளப் போகிறது என்பது நிச்சயம். பாகிஸ்தான் உண்மையில் பொருளாதாரச் சரிவின் மோசமான நிலையிலிருந்து வெளிவர விரும்பினால், அந்த நாட்டில் உள்ள பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியளிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். அதன் ஒருமைப்பாட்டை நிரூபிக்க வேண்டும். மீண்டும் வழக்கம் போல் உலகை ஏமாற்ற பாகிஸ்தான் முயற்சித்தால், பயங்கரவாதத்தால் எதிர்பார்க்காத பிரச்னைகளை மேலும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இது அந்த நாட்டை நேரடியாக பயங்கரமான பொருளாதார வீழ்ச்சி மற்றும் துயரத்திற்கு இட்டுச் செல்லும்.