தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 18, 2019, 4:54 PM IST

ETV Bharat / international

பாகிஸ்தானில் 49,000 பேருக்கு டெங்கு காய்ச்சல்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 49 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவி இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

pakistan dengue

அண்டை நாடான பாகிஸ்தானில் சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. இதன் காரணமாக இதுவரை 79 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பாக பாகிஸ்தான் தேசிய சுகாதார சேவையின் செய்தித் தொடர்பாளர் ஷாஜித் ஷாஷா பேசுகையில், "பாகிஸ்தானில் டெங்கு பாதிப்புகளை தெரிந்துகொள்ள பயன்படுத்தப்படும் செயல்முறைகளால் இத்தனை பேருக்கு காய்ச்சல் பரவி இருப்பது தெரியவந்துள்ளது. பாகிஸ்தானில் இருப்பது போலவே உலக நாடுகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது" என்றார்.

பாகிஸ்தான் அரசு தரவுகளின் படி, 49 ஆயிரத்து 587 டெங்கு நோய் பரவியிருப்பதாகவும், அதில் 13 ஆயிரத்து 173 நோயாளிகள் இஸ்லாமாபாத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. இதுபோன்று பஞ்சாபில் 9 ஆயிரத்து 855 பேருக்கும், கைபர் பக்துன்வாவில் 7 ஆயிரத்து 776 பேருக்கும், பலோசிஸ்தானில் 3 ஆயிரத்து 217 பேருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. உலகளவில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஏராளமான மக்கள் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றனர்.

இதையும் படிங்க:தீவிரமடையும் ஹாங்காங் போராட்டம் - பல்கலைக்கழகத்தை சுற்றிவளைத்த போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details