நேபாளம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகப் பருவமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக இமயமலையை ஒட்டியுள்ள 28 மாவட்டங்கள் கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளன.
நேபாளத்தைப் புரட்டிப்போட்ட பருவமழை: பலி எண்ணிக்கை உயர்வு - வெள்ளப்பெருக்கு
காத்மாண்டு: நேபாளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஆகியவற்றில் சிக்கி 65 பேர் பலியாகியுள்ளதாகவும், 30 பேர் மாயமாகியுள்ளதாகவும் அந்நாட்டு காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு
இதில், சிக்கித் தவித்த ஆயிரத்து 146 பேரை காவல் துறையினர், பேரிடர் மீட்புக் குழுவினர் உள்ளிட்டோர் பத்திரமாக மீட்டனர். இதுவரை 65 பேர் பலியாகியுள்ளதாகவும், 30 பேர் மாயமாகியுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஒன்றாம், இரண்டாம், மூன்றாம் மாகாணங்களில் கனமழை காரணமாக அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அனைத்து மாகாண அரசுகளும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொண்டுவருகின்றன.