நாட்டில் நிலவும் ஆக்ஸிஜன் தட்டுபாட்டை நிவர்த்தி செய்ய, இந்திய விமானப்படை IL-76 விமானத்தில் இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவிலிருந்து 2 கண்டெய்னர்களில் கிரையோஜெனிக் ஆக்ஸிஜன் கலன்களை எடுத்து வருகிறது.
ஜகார்த்தாவிலிருந்து 2 கிரையோஜெனிக் ஆக்ஸிஜன் கண்டெய்னர்கள் இந்தியா வருகை! - ஜகார்த்தா
டெல்லி: இந்திய விமானப்படை விமானம் மூலம் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து 2 கண்டெய்னர்களில் கிரையோஜெனிக் ஆக்ஸிஜன் கலன்களை எடுத்து வருகிறது.
இதேபோல உள்நாட்டிற்குள், விமானப்படையின் சி -17 விமானத்தில் நாக்பூரிலிருந்து புவனேஸ்வருக்கு நான்கு ஆக்ஸிஜன் டேங்கர்களும், விஜயவாடாவிலிருந்து புவனேஸ்வருக்கு நான்கு ஆக்ஸிஜன் டேங்கர்களும், லக்னோவிலிருந்து ராஞ்சிக்கு இரண்டு ஆக்ஸிஜன் டேங்கர்களும், போபாலில் இருந்து ராஞ்சிக்கு இரண்டு ஆக்ஸிஜன் டேங்கர்களும், யெலஹங்காவிலிருந்து புவனேஸ்வருக்கு இரண்டு ஆக்ஸிஜன் டேங்கர்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்து 29 ஆயிரம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.