பெய்ஜிங் : சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து கோவிட்-19 என்னும் புதிய வகை கரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சீனா கோவிட் பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி முன்னேறிவந்தது. இதற்கிடையில் தற்போது பெய்ஜிங்கில் மீண்டும் கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
அங்கு புதிதாக 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சீனக் குடிமக்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து பெய்ஜிங்கில் நடைபெறவிருந்த மாரத்தான் போட்டி நிறுத்தப்பட்டது.
இது குறித்து அலுவலர்கள் கூறுகையில், “மாரத்தான் போட்டி, தொற்றை கட்டுப்படுத்தும் முனைப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளது. நகரத்தில் பூஜ்ய கோவிட் பாதிப்பு என்ற நிலையை எட்டுவோம். இந்தப் பாதிப்பும் சுற்றுலாப் பயணிகளால் பரவியிருக்கக் கூடும்” என்றனர்.