தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனா பாதிப்பு: அமெரிக்காவில் 200ஐ தாண்டியது உயிரிழப்பு! - அமெரிக்காவில் 200ஐ தாண்டியது கரோனா உயிரிழப்பு!

வாஷிங்டன்: கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 200ஐ தாண்டியுள்ளது.

Coronavirus cases surge in US
Coronavirus cases surge in US

By

Published : Mar 20, 2020, 9:16 PM IST

கோவிட்-19 வைரஸ் தொற்று தற்போது சீனாவில் படிப்படியாக குறைந்துவருகிறது. இருப்பினும் இத்தாலி, தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை (மார்ச் 19) வரை அமெரிக்காவில் கோவிட்-19 வைரஸ் தொற்றால் 218 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 14,299 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஆறாவது இடத்தை அமெரிக்கா பெற்றுள்ளது.

குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில், இந்த வைரஸ் தொற்று அமெரிக்காவில் பல மடங்கு அதிகரித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள 50 மாகாணங்களிலும் இந்த வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வைரஸ் பரவலைக் கட்டுபடுத்தும் விதமாக கலிபோர்னியா மாகாணத்திலுள்ள மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அம்மாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

கோவிட்-19 வைரஸ் தொற்றால் சீனா (80,967 பேர் பாதிப்பு; 3,248 உயிரிழப்பு), இத்தாலி (41,035 பேர் பாதிப்பு; 3,405 உயிரிழப்பு), இரான் (18,304 பேர் பாதிப்பு; 1,284 உயிரிழப்பு), ஸ்பெயின் (19,077 பேர் பாதிப்பு; 831 உயிரிழப்பு), ஜெர்மனி (15,320 பேர் பாதிப்பு; 44 உயிரிழப்பு), பிரான்ஸ் (10,995 பேர் பாதிப்பு; 372 உயிரிழப்பு) ஆகிய நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: சீனாவால் நாம் அவஸ்தையை சந்திக்கிறோம் - ட்ரம்ப்

ABOUT THE AUTHOR

...view details