நியூசிலாந்த் நாட்டுக்கு ஐநா பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டேரஸ் முன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
'எதிர்பார்த்ததை விட பருவநிலை வேகமாக இருக்கிறது' - ஐநா பொதுச்செயலாளர் வருத்தம் - ஐநா பொதுச்செயலாளர்
வெலிங்டன்: நாம் எதிர்பார்த்ததை விட பருவநிலை வேகமாக சென்று கொண்டிப்பதாக ஐநா பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டேரஸ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஆக்லாண்ட் (Aukland) நகரில் அந்நாட்டுப் பிரதமர் ஜாகின்டா ஆர்டரெனுடன், ஐநா பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டேரஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய குட்டேரஸ், "வெப்பநிலையை இரண்டு டிகிரி செல்சியஸ்க்கு கீழ் வைப்பதாக, 2016 பாரிஸ் உடன்படிக்கையில் உலக நாடுகள் எடுத்துக் கொண்ட உறுதிமொழியின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை. நாம் எதிர்பார்த்ததை விட பருவநிலை வேகமாக சென்று கொண்டிருக்கிறது. உலக வெப்பநிலையானது கடந்த 4 ஆண்டுகளில் முன்பைவிட அதிகஅளவு உயர்ந்துள்ளது" என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.