ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாதுகாப்புப்படை வீரர்களை குறிவைத்து சரமாரி தாக்குதலில் தலிபான் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக பதற்றமான சூழல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேர் பலி! - personnel
காபூல்: ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினருக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 பேர் பலி
இந்நிலையில், கந்தகார் மாகாணத்தின் ஸ்பின் போல்டாக் மாவட்டத்திலுள்ள சோதனைச் சாவடி ஒன்றை குறிவைத்து தலிபான் தாக்குதல் நடத்தியது. சுமார் நான்கு மணி நேரமாக நீடித்த இந்த தாக்குதலில் 14 தலிபான் பயங்கரவாதிகள், மூன்று பாதுகாப்புப் படை வீரர்கள் என மொத்தம் 17 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.