ஆஸ்திரேலியாவின் சிட்னி கடற்கரை பகுதியில் நேற்று திடீரென சீன கப்பற்படைக்கு சொந்தமான மூன்று ஃபிரிக்கேட் ரக போர்க்கப்பல்கள் நுழைந்தன. இதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கப்பல்களின் இந்த திடீர் வருகையால் அச்சமடைந்தனர். இது ஆஸ்திரேலியாவில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆஸ்திரேலியாவில் திடீரென நுழைந்த சீன போர்க்கப்பல்கள் - scott morrison
சிட்னி: சீன கப்பற்படையைச் சேர்ந்த மூன்று போர்க்கப்பல்கள் நேற்று சிட்னி கடற்பகுதியில் நுழைந்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இது குறித்து சாலமன் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனிடம் கேட்கப்பட்டபோது, 'சீன போர்க்கப்பல்களில் வருகை மற்றவர்களுக்கு ஆச்சரியமளிக்கலாம். ஆனால் அவைகளின் வருகை குறித்து அரசுக்கு முன்பே தெரியும் என்பதால் எங்களுக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை.
கடந்த சில தினங்களுக்கு முன் ஆஸ்திரேலிய போர்க்கப்பல்கள் சீன கடற்பகுதிக்குச் சென்றன. அந்தக் கப்பல்கள் தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் போதை மருந்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பின் நாடு திரும்பிக் கொண்டிருக்கின்றன. அதேபோன்றுதான் தற்போது சீன போர்க்கப்பல்கள் இங்கு வந்துள்ளன. அந்தக் கப்பல்கள் இங்கு நான்கு நாட்கள் வரை இருக்கும்' என்று அவர் தெரிவித்தார்.