தைவானுக்கு 220 கோடி மதிப்பிலான டாங்கி, ராக்கேட்டுகளை விற்க அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக வெளியான செய்திகளைக் கடந்த திங்கள்கிமையன்று அமெரிக்கா உறுதிப்படுத்தியது. இதுகுறித்து தைவான் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறுகையில், அதிகரித்து வரும் சீனாவின் மிரட்டல் காரணமாகவும் தைவானின் ராணுவத்தைப் பலப்படுத்தவும் இந்த வர்த்தகம் நடைபெறுவதாகக் கூறினார்.
தைவானுடனான ஆயுத விற்பனையை அமெரிக்க ரத்து செய்யவேண்டும் - சீனா - தைவான்
பெய்ஜிங்: சீனாவின் "ஒரே சீனா" கொள்கைக்கு மதிப்பளித்து தைவானுடன் மேற்கொள்ளவிருக்கும் ஆயுத விற்பனையை அமெரிக்க ரத்து செய்யவேண்டும் என்று சீனா கூறியுள்ளது.
China urges US to withdraw arms sales to Taiwan
தைவான் சீனாவின் ஒருபகுதி எனக் கூறிவரும் சீனாவுக்கு இந்த ஒப்பந்தம் கடும் அத்திருப்பதிகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெங் ஷுவாங் கூறுகையில், சீனாவின் "ஒரே சீனா" கொள்கைக்கு அமெரிக்க மதிப்பளிக்க வேண்டும் எனவும் அமெரிக்கச் சீனா உறவில் மேலும் விரிசல் விழுவதைத் தடுக்க இந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.