பிரிட்டன் நாட்டிலிருந்து 1997ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற ஹாங்காங், சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற பகுதியாக இருக்கிறது. ஹாங்காங்கின் வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை ஆகியவை மட்டுமே சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளன. மற்ற அனைத்துத் துறைகளையும் மக்களால் ஹாங்காங் அரசே நிர்வகித்துவருகிறது.
இருப்பினும், ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் சீனா தொடர்ந்து பல்வேறு சட்டங்களை இயற்றுகிறது. இந்நிலையில் ஹாங்காங் தேசிய பாதுகாப்பு மசோதாவை சீன அரசு சமீபத்தில் நிறைவேற்றியது.
அந்தச் சட்டம் குறித்து மூன்று நாள்களுக்கு முன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், தேசிய பாதுகாப்பு தொடர்பான சில அரிதான ஹாங்காங் வழக்குகளை மட்டும் இனி சீனா விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சீனாவின் ஹாங்காங் நகருக்கான துணைத் தலைவர் டெங் ஜொங்குவா கூறுகையில், "இந்த தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவதில் பெரும்பாலான அதிகாரங்களும் கடைமைகளும் ஹாங்காங் நகர பாதுகாப்பு அமைப்புகளுக்கே இருக்கும்.