தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பன்றி இறைச்சி இறக்குமதிக்கு தடைவிதிக்கும் சீனா!

பெய்ஜிங்: பன்றிக் காய்ச்சல் அச்சத்தால் இந்தியாவிலிருந்து பன்றி இறைச்சி இறக்குமதி செய்வதற்கு சீன அரசு தடை விதிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பன்றிக் காய்ச்சல்
பன்றிக் காய்ச்சல்

By

Published : May 29, 2020, 3:32 PM IST

நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், அசாமில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. சுமார் 306 கிராமங்களில், 2500-க்கும் அதிகமான பன்றிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சீனாவின் சுங்க துறையினரும், வேளாண் துறையினரும் இணைந்து வெளியிட்ட அறிக்கையின்படி, "இந்தியாவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் (ASF) பரவி வருவதை கருத்தில் கொண்டு பன்றிகள், காட்டுப்பன்றி தொடர்புடைய பொருட்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க சீனா தயாராக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்தத் தடையானது பெய்ஜிங்கிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான எல்லை பிரச்னைகளின் காரணமாக விதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:மோடி அதிருப்தியில் உள்ளார் - ட்ரம்ப்

ABOUT THE AUTHOR

...view details