இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு, ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு எதிராகவும் இந்தியர்களின் தனியுரிமையைப் பாதிக்கும் வகையிலும் செயல்படுவதாகக் கூறி 59 சீன செயலிகளுக்கு மத்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் திங்கள் கிழமை (ஜூன் 29) தடை விதித்து உத்தரவிட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், "இந்தியா விதித்துள்ள இந்தத் தடை நோட்டீஸ் கவலையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நாங்கள் தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலைமை குறித்து பரிசீலனை செய்து வருகிறோம்.
சீன அரசு எப்போதும் சீன தொழிலதிபர்களிடம் சர்வதேச விதிமுறைகளையும், அந்நிறுவனங்கள் செயல்படும் நாடுகளின் உள்ளூர் சட்டங்களையும் முறையாகப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.