தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 13, 2019, 5:21 PM IST

ETV Bharat / international

'நேபாளத்திற்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்கும் சீனா'

காத்மண்டு: நேபாள நாட்டிற்கு சுமார் ரூ.5 ஆயிரம் கோடி நிதி உதவி தர சீனா முடிவு செய்துள்ளது.

china nepal pms

பிரதமர் மோடியுடனான மாமல்லபுரம் உச்சிமாநாட்டை முடித்துக்கொண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங், தற்போது நேபாளம் சென்றுள்ளார்.

இந்நிலையில், அந்நாட்டு அதிபர் பித்யா தேவி பந்தாரியா ஜின்பிங் சீதால் நிவாஸ் ( நேபாள் அதிபர் மாளிகை) இன்று சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, சீனாவின் ஒரே நாடு கொள்ளைக்கு ஆதரவளிக்கும் நேபாளத்திற்கு பாராட்டு தெரிவித்த அதிபர் ஜின்பிங், அந்நாட்டுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க உறுதியளித்துள்ளார். இந்த நிதி உதவியானது 2020-22 ஆண்டுகளில் படிப்படியாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க : சீனர்களுக்கு இ-விசா கட்டுப்பாடுகள் தளர்வு!

ABOUT THE AUTHOR

...view details