தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனா தடுப்பு மருந்து: பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்த சீனா!

பெய்ஜிங்: சீனா தான் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்தை நாட்டில் உள்ள குறிப்பிட்ட துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மீது பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளதாக குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

China approves use of COVID-19 vaccine
China approves use of COVID-19 vaccine

By

Published : Aug 23, 2020, 2:59 PM IST

உலகெங்கும் கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதுவரை 2.33 கோடி பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உலகெங்கும் உள்ள பல்வேறு ஆராய்சியாளர்களும் கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக ரஷ்யா, மூன்றாம்கட்ட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளாத நிலையிலும் ஸ்புட்னிக் V தடுப்பு மருந்தின் பயன்பாட்டிற்கு அனுமதியளித்திருந்தது. ரஷ்யாவைப் போலவே, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தயாரிக்கப்படும் தடுப்பு மருந்துகளும் தற்போது மூன்றாம்கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளன.

இந்நிலையில், சீனாவில் ஒரு மாத மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்துள்ள நிலையில், கரோனா தடுப்புமருந்தை பொதுமக்கள் மீது பயன்படுத்த சீனா அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளதாக குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

வரவிருக்கும் இலையுதிர் மற்றும் குளிர் காலங்களில் கரோனா பரவல் மீண்டும் ஏற்படாமல் இருப்பதை தடுக்க, உணவுச் சந்தைகள், போக்குவரத்து அமைப்புகள் மற்றும் சேவைத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த தடுப்பு மருந்து உடனடியாக வழங்கப்படும் என்று சீனாவின் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் ஜெங் ஜாங்வே தெரிவித்தார்.

மேலும்,"மூன்றாம்கட்ட மருத்துவ பரிசோதனைக்காக ஐக்கிய அமீரகத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டுள்ளனர். இந்தத் தடுப்புமருந்தின் செயல்திறன் குறித்து தொடர்ந்து பரிசீலனை செய்துவருகிறோம். இருப்பினும், இந்த மருத்துவ பரிசோதனைகள் மூலம் எங்கள் தடுப்பு மருந்து மிகவும் பாதுகாப்பானது என்பது தெளிவாகத் தெரிகிறது" என்றார்.

உலகெங்கும் தற்போது வரை 2 கோடியே 33 லட்சத்து 80 ஆயிரத்து 569 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் எட்டு லட்சத்து 8 ஆயிரத்து 697 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: 'இது எங்க லிஸ்ட்லயே இல்ல' - ரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்து குறித்து உலக சுகாதார அமைப்பு

ABOUT THE AUTHOR

...view details