லடாக் எல்லைப் பகுதியில் இந்திய-சீன படைகளுக்கு இடையே ஒரு மாதத்துக்கும் மேலாக மோதல் நிலவிவருகிறது.
இந்நிலையில், இந்த மோதல் வன்முறையாக வெடித்ததில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 பேர் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 43 வீரர்கள் உயிரிழந்ததாகத் தெரிகிறது. இதனால் லடாக்கில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.
இதனிடையே, இந்த விவகாரம் குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவ் லிஜியான், "ஜூன் 15ஆம் தேதி இந்திய ராணுவத்தினர், சீன எல்லைக்குள் இருமுறை அத்துமீறி நுழைந்து சீனப்படை மீது தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியளிப்பாக உள்ளது.
இது குறித்து இந்தியாவிடம் சீனா கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. இந்திய ராணுவத்தினர் இதுபோன்ற தன்னிச்சையான வன்முறையில் ஈடுபடக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியா-சீனா எல்லை மோதல்: 20 ராணுவ வீரர்கள் வீரமரணம்!