பெய்ஜிங்:நிலவின் கற்கள், பாறைகளை ஆய்வு செய்வதற்காக, நிலவுக்கு செலுத்தப்பட்ட சீனாவின் சாங்கி-5 எனும் ஆளில்லா விண்கலம் பூமியை நோக்கி புறப்பட்டது.
இதுதொடர்பாக சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, பூமியை நோக்கி புறப்பட்டுள்ள விண்கலத்தின் நிலை நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து நிலவின் கற்களை கொண்டு வந்து அதனை ஆய்வு செய்வதற்கு சீனா திட்டமிட்டது. அதன்படி கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி சீனாவின் சாங்கி-5 எனும் ஆளில்லா விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. இதன் ஆய்வு கலம் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெற்றிகரமாக நிலவின் ஓசன் ஆப் ஸ்டோர்ம்ஸ் எனும் பகுதியில் தரையிறங்கியது.