தலைநகர் காபூலில் உள்ள குலா-ஈ-வசீர் பகுதியின் புல்-இ-சார்கி சாலையில் அமெரிக்க படைகளின் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது, அவர்களை குறிவைத்து கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளின் அட்டூழியம்; அமெரிக்க படைகள் மீது தாக்குதல்!
காபூல்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளின் வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கார் வெடிகுண்டு தாக்குதல்
உள்ளூர் நேரப்படி, காலை 8.30 மணிக்கு நிகழ்ந்த இந்த தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும், பலத்த காயமடைந்த அமெரிக்க வீரர்கள் நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
ராணுவ பயிற்சி முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.