தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'இந்தியாவின் பதிலை எதிர்நோக்கியுள்ளோம் - நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் - இந்தியா நேபாளம் எல்லை பூசல்

காத்மாண்டு: எல்லை பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த நேபாள அரசு அழைப்பு விடுத்துள்ள சூழலில், இந்தியாவின் பதிலை எதிர்நோக்கியுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதீப் கியாவாலி தெரிவித்துள்ளார்.

nepal dispute
nepal dispute

By

Published : Jun 10, 2020, 5:16 PM IST

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு நேற்று பேட்டியளித்திருந்த அவர், "எல்லை பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் அதற்குப் பிறகு இந்த ஆண்டு மே மாதம் என தொடர்ந்து இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துவருகிறோம்.

இந்தியாவின் பதிலை எதிர்நோக்கியுள்ளோம். இது நடந்தால் 21ஆம் நூற்றாண்டின் தேவைக்கேற்ப இந்தியா-நேபாளம் இடையேயான தனித்துவமான உறவு வளர்ச்சி காணும். ஆனால், கரோனா வைரஸ் இதற்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது" என்றார்.

இந்தியா-நேபாளம் இடையே நீண்ட காலமாக நிலவிவந்த எல்லை பிரச்னை, கடந்த மாதம் முதல் கசப்பான மோதலாக உருவெடுத்தது. கைலாஷ்-மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் உத்தரகண்ட் மாநிலம், தர்சூலாவிலிருந்து, லிப்புலேக் என்ற சீன எல்லைப் பகுதி வரை புதிய வழித்தடம் ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. இதனை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலிக் காட்சி வாயிலாக கடந்த மே 8ஆம் தேதி திறந்துவைத்தார்.

இந்நிலையில், சாலை அமைக்கப்பட்ட பகுதி தங்கள் எல்லைக்கு உள்பட்டதாகக் கூறி நேபாள அரசு கண்டனக் குரல் எழுப்பிவருவது, தற்போது எழுந்துள்ள புது மோதலுக்கு வித்திட்டுள்ளது.

இதையும் படிங்க : இந்தியா - நேபாளம் பூசல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் - சி. உதயபாஸ்கர்

ABOUT THE AUTHOR

...view details