இலங்கையில் கடந்த ஞாயிறன்று நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 253 பேர் பலியாகினர். மேலும், பொது இடங்களில் ஆங்காங்கே வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி - இலங்கை
கொழும்பு: இலங்கையில் மீண்டும் குண்டு வெடித்ததில் 15 பேர் பலியாகினர்
sri lanka
இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும், இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் மனித வெடிகுண்டுகள் என தெரியவந்திருக்கிறது. அதுதொடர்பான புகைப்படங்களையும் அந்நாட்டு காவல்துறை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், அம்பாறையில் இருக்கும் கல்முனை பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் வெடிகுண்டு வெடித்ததில் 15 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த சம்பவம் இலங்கையில் மேலும் பரபரப்பையும், பதற்றத்தையும் அதிகரித்துள்ளது.