தமிழ்நாடு

tamil nadu

அரசியலில் நுழைந்தார் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பிரதமரின் இளைய மகள்

By

Published : Dec 1, 2020, 12:49 PM IST

பாகிஸ்தானில் குண்டுவைத்து கொல்லப்பட்ட முதல் பெண் பிரதமரான பெனாசீர் புட்டோவின் இளைய மகள் ஆசிஃபா புட்டோ சர்தாரி அரசியலில் காலடி எடுத்துவைக்கிறார்.

Benazir Bhutto's youngest daughter makes political debut at PDM rally in Multan
Benazir Bhutto's youngest daughter makes political debut at PDM rally in Multan

கராச்சி:பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரான பெனாசீர் புட்டோ 2007ஆம் ஆண்டு ராவல்பிண்டியில் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த இவர் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது இந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்தது.

இந்நிலையில், சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது இளைய மகளான ஆசிஃபா புட்டோ சர்தாரி அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பாகிஸ்தான் ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சிக்காகவும், தனது சகோதரர் பில்வால் புட்டோவிற்கு ஆதரவாகவும் அவர் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "இந்தக் கூட்டத்தில் இருக்கும் அனைவரும் ஜனநாயகத்தை நிலைநிறுத்தப் பாடுபட்டு உயிர்நீத்த எனது தாயை நினைவில் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, தற்போது நமது நாட்டிற்கு உண்மையான சுதந்திரத்தைப் பெற்றுத்தர போராடிக்கொண்டிருக்கும் எனது சகோதரரை ஆதரிக்கவும் வேண்டும்" என்றார். மேலும், தற்போதைய அரசு குறித்தும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.

இவரது சகோதரர், பில்வால் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால், அவரது சகோதரருக்கு ஆதரவாக ஆசிஃபா பரப்புரை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாக் - ஆஃப்கான் எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details