அர்மேனியா-அசர்பைஜான் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற போரில் ரஷ்யா தலையிட்டு சமரச பேச்சுவார்த்தை செய்துவைத்தது. இதையடுத்து போர் நிறுத்தம் மேற்கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், ஒப்பந்தத்தை மீற அர்மேனி ராணுவத்தினரின் மீது அசர்பைஜான் ராணுவம் வான்வழித்தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலின் காணொலியை வெளியிட்ட அசர்பைஜான் ராணுவம், அர்மேனிய ராணுவத்தாக்குதலை தடுக்க தற்காப்பு நடவடிக்கையாகவே இந்த செயலை மேற்கொண்டதாக கூறியுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்ட அசர்பைஜான் இதை மறுத்துள்ள அர்மேனிய அதிகாரிகள், போர் நிறுத்த விதிகளை மீறியுள்ளதாக அசர்பைஜன் மீது பரஸ்பரக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இந்த சம்பவத்தால் அங்கு மீண்டும் பதற்றமான சூழல் உருவெடுத்துள்ளது.
ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் பகுதிகளான இந்த இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லைப் பகுதி தொடர்பாக 1994ஆம் ஆண்டு முதல் கடுமையான மோதல் போக்கு நிலவிவருகிறது. சர்ச்சைக்குரிய பிராந்தியமான நகோர்னோ-காாராபக் பகுதியில் இரு நாடுகளும் கடுமையாக சண்டையிட்டு வந்தன.
இந்த மோதலில் அசர்பைஜான் நாட்டிற்கு அண்டை நாடான துருக்கி ஆதரவு கரத்தை நீட்டி ராணுவ உதவிகளையும் மேற்கொண்டது. துருக்கியின் தலையீட்டை விரும்பாத ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு அமைதி பேச்சு வார்த்தைக்கு வழிவகுத்தார். இருப்பினும் தற்போது இரு நாடுகளும் மீண்டும் மோதத் தொடங்கியுள்ளது சர்வதேச அரங்கில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கோவிட் பாதிப்புக்குப்பின் முதல்முறையாக பொதுநிகழ்வில் தோன்றிய ட்ரம்ப்