ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதியைச் சேர்ந்த அலெக் சிக்லே (29), வடகொரியா தலைநகர் பியோங்யாங்கில் உள்ள இரண்டாம் கிம் சாங் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சித்துறையில் பயின்று வருகிறார். கடந்த ஒரு மாதமாகக் காலமாக அவரிடமிருந்து எவ்வித தகவலும் கிடைக்கப் பெறவில்லை என குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், வட கொரியா அலுவலர்களால் சிக்லே கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலிய மாணவரை விடுதலை செய்த வடகொரியா! - வடகொரியா
கான்பரா: "வடகொரியாவில் கைது செய்யப்பட்ட ஆஸ்திரேலிய மாணவர் விடுதலை செய்யப்பட்டு விட்டார்" என்று, ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம், தொடர்பாக ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன், "கைது செய்யப்பட்ட மாணவரை வட கொரியா விடுதலை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாக அவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டார். இதற்குப் பெரிதும் உதவியாக இருந்து செயல்பட்ட சுவீடன் நாட்டு அலுவலர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
வட கொரியாவுடன் ஆஸ்திரேலியாவுக்கு எவ்வித வெளியுறவு தொடர்பு இல்லாததால், சுவீடன் நாட்டுத் தூதரகம் மூலம் ஆஸ்திரேலியர்கள் வட கொரியாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். எனினும், அவசியமற்ற பயணத்தைத் தவிர்க்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா அரசு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.