தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'தண்ணீர்.. தண்ணீர்..!' ஐந்தே நாட்களில் பத்தாயிரம் ஒட்டகங்களை சுட்டு வீழ்த்த ஆஸி., இலக்கு! - helicopter will shot 10000 camels soon by australia government

கான்பெரா: ஆஸ்திரேலியாவில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சுமார் பத்தாயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

ஒட்டகம்
ஒட்டகம்

By

Published : Jan 8, 2020, 1:40 PM IST

ஆஸ்திரேலியாவில் அனங்கு பிட்ஜந்த்ஜட்ஜாரா யான்குனிட்ஜட்ஜாரா (Anangu Pitjantjatjara Yankunytjatjara) பகுதியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.

இதனால் அங்குள்ள வனப்பகுதிகளிலிருந்து ஒட்டகங்கள் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன.

இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மக்களின் சிரமத்துக்கு ஒட்டகங்கள் அருந்தும் தண்ணீர் பிரதான காரணம்.

இதனால், ஆஸ்திரேலியா அரசாங்கம் பத்தாயிரம் ஒட்டகங்களை ஹெலிகாப்டர் மூலமாக சுட்டுக்கொல்ல முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை ஐந்தே நாட்களில் முடிக்க வேண்டும் என்றும் அவர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். இந்த ஒட்டகங்களின் கழிவுகள் ஒரு டன் அளவிலான கார்பன்டை ஆக்ஸ்சைடுக்கு நிகரான மீத்தேன் வாயுவை உருவாக்குவதாக கூறப்படுகிறது.

எனவே, ஆஸ்திரேலியாவில் ஒட்டகங்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாகவும் இது கருதப்படுகிறது. தற்போது ஆஸ்திரேலியாவில் பத்து லட்சத்திற்கும் அதிகமான ஒட்டகங்கள் உள்ளன.

இதையும் படிங்க: இந்தியர்கள் ஈராக் செல்ல வேண்டாம் - வெளியுறவுத் துறை அறிவுறுத்தல்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details