தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஜப்பான் நிலச்சரிவு: 19 பேர் மாயம் - பலத்த மழை

டோக்கியோவின் மேற்கே உள்ள நகரம் ஒன்றில் சனிக்கிழமை(ஜூலை 3) பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து, கறுப்பு நிறத்திலான நீர் மற்றும் குப்பைகள் நிறைந்த ஒரு சக்திவாய்ந்த மண் சரிவு ஏற்பட்டது. சேறும், சகதியுமாக ஏற்பட்ட நிலச்சரிவால், அப்பகுதியில் இருந்த குடியிருப்புகள், கார்கள் அடித்து செல்லப்படும் காணொலி வெளியாகி, காண்போர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.

ஜப்பான் நிலச்சரிவு
ஜப்பான் நிலச்சரிவு

By

Published : Jul 3, 2021, 5:30 PM IST

டோக்கியோ:டோக்கியோவில் இன்று(ஜூலை 3) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலச்சரிவில் மாயமான 19 பேரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள அட்டாமி வெப்ப நீரூற்றுகளுக்குப் பெயர் பெற்ற ஒரு நகரமாகும். 'அட்டாமி' என்ற பெயருக்கு சூடான கடல் என அழைக்கின்றனர்.

ஜப்பானில் பெய்த பலத்த மழையால் சனிக்கிழமை(ஜூலை 3) ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.

சுமார் 35 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். வார தொடக்கத்தில் இருந்து ஜப்பானில் பலத்த மழை பெய்து வருகிறது.

நாட்டின் மத்திய பகுதி, டோக்கியோவிலுள்ள ஆறுகளில் கொள்ளளவைத் தாண்டி மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதன் காரணமாக, நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது. இருப்பினும், தொடர்ந்து கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில், இன்று(ஜூலை 3) காலை 10.30 மணியளவில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால், அப்பகுதியில் இருந்த பல குடியிருப்புகள் அனைத்தும் மண்ணுக்குள் புதைந்தன. குடியிருப்புகளில் வசித்து வந்த சுமார் 19 பேரைக் காணவில்லை என, முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பான் நிலச்சரிவு

இந்நிலையில், மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், உயர் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அப்பகுதியில் வசிக்கும் 35,500க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நிலச்சரிவில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ராணுவத்தினர், பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர் மழையால் பள்ளத்தாக்குகள், மலைகளின் மண் திட்டுகளில் தளர்வு ஏற்பட்டுள்ளதால், நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிக்கலாமே:உத்தரகாண்ட் நிலச்சரிவு மீட்புப் பணியில் உதவிவரும் தமிழ்நாடு ட்ரோன் குழு

ABOUT THE AUTHOR

...view details