இம்மாதம் முதல் வாரத்திலிருந்து ஆராக்கான் பயங்கரவாதிகள் மற்றும் மியான்மர் ராணுவம் இடையே தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த இரு நாட்களாக ராணுவ தளத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் உயிரிழந்தள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.
மியான்மரில் ராணுவ தளத்தை குறிவைத்து தாக்குதல்! - myanmar
யாங்கூன்: மியான்மரில் ராணுவ தளத்தை குறிவைத்து பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் வீரர்கள் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மேஜர் ஜெனரல் டூன் டூன் நுய், ஆராக்கான் பயங்கரவாதிகள் எல்லை குறிவைத்து தாக்குதல் நடத்துவது கண்டிக்கதக்கது எனக் கூறினார். மேலும் ஜனவரி மாதம் முதல் 97 முறை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த ஆராக்கான் பயங்கரவாத அமைப்பின் செய்தி தொடர்பாளர்யூ கையிங் தூகா, இது முற்றிலும் பொய்யான தகவல் எனத்தெரிவித்தார்.
மியான்மரின் ரக்கீன் மாகாணத்தை தனி பிராந்தியமாக அறிவிக்கக்கோரி ஆரக்கான் அமைப்பு தாக்குதல் நடத்திவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.