தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இலங்கையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை;  கொழும்பு சென்றார் அஜித் தோவல் - இலங்கை பாதுகாப்பு செயலர் கமல் குணரத்னே

இந்தியா, இலங்கை, மாலத்தீவு நாடுகளுக்கு இடையேயான முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்காக இலங்கை சென்றுள்ளார் அஜித் தோவல்.

Ajit Doval
Ajit Doval

By

Published : Nov 27, 2020, 3:45 PM IST

இந்தியா, இலங்கை, மாலத்தீவு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்தவும், கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்யவும் முத்தரப்பு பேச்சு வார்த்தை இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கொழும்பு சென்றுள்ளார். அவரை இலங்கை ராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா வரவேற்றார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அளவில் நடைபெறும் இந்த முத்தரப்பு பேச்சு வார்த்தையில் இலங்கை பாதுகாப்பு செயலர் கமல் குணரத்னே, மலாத்தீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா திதி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இதற்கு முன்னர் 2011ஆம் ஆண்டு மாலத்தீவிலும், 2013ஆம் ஆண்டு இலங்கையிலும், 2014ஆம் ஆண்டு இந்தியாவிலும் இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆறாண்டுகளுக்குப் பின் நடைபெறும் பேச்சுவார்த்தை என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க:கோவிட்-19: உலகளவில் 6.13 கோடி பேர் பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details