இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோரை அழைத்துக் கொண்டு டைட்டானிக் கப்பல் 1912ஆம் ஆண்டு, ஏப்ரல் 10ஆம் தேதி நியூயார்க் நகரை அடைவதற்காக புறப்பட்டது. அந்த கப்பல் இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்கா சென்றடைவதற்காக தனது முதல் பயணத்தை மேற்கொண்டது.
தெறி வைரலாகும் டைட்டானிக் கப்பலின் முப்பரிமாண வீடியோ! - முப்பரிமாண முறை வீடியோ
107 ஆண்டுகளுக்கு முன்பு சிதைந்து போன டைட்டானிக் கப்பலின் முப்பரிமாண காணொளியை ஆழ்கடல் ஆய்வாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கப்பலில் பயணித்த பலரும் உற்சாகத்துடன் கிளம்பிய நிலையில், திடீரென்று எதிர்பாராத விதமாக கடலில் உள்ள பனிப்பாறையின் மேல் மோதி, சுமார் 12,500 அடி ஆழத்தில் மூழ்கியது. இவ்விபத்தில் 706 பேரை டைட்டானிக் கப்பல் விழுங்கிக் கொண்டது. உயிரிழந்தவர்களில் தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் இருந்தனர். இக்கோர சம்பவம் அக்கால கட்டத்தில், எவராலும் மறக்க முடியாத ஒரு துயரத்தை ஆழ்த்தியது. இக்கப்பலின் வாழ்வியலை வைத்து டைட்டானிக் என்னும் திரைப்படம் கூட உருவாக்கப்பட்டு, பல்வேறு ஆஸ்கர் விருதுகளை குவித்தது.
இந்நிலையில் 107 ஆண்டுகளுக்குப் பிறகு சிதைந்து போன டைட்டானிக் கப்பலின் காட்சியை முப்பரிமாணமுறையில் வீடியோவாக எடுத்து ஆழ்கடல் ஆய்வாளர்கள் வெளியிடப்பட்டுள்ளனர். இது பலராலும் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.