தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஆப்கானிஸ்தானில் மருத்துவமனையை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்! - ஆப்கானிஸ்தான் மருத்துவமனை தாக்குதல்

காபூல்: பக்ராம் விமானப்படை தளம் அருகே புதிதாகக் கட்டப்பட்டுவரும் மருத்துமனையை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளது.

afghanistan air base, ஆப்கானிஸ்தான் தற்கொலைப் படை தாக்குதல், ஆப்கானிஸ்தான் பக்ரம் விமானப் படை தாக்குதல்
Afghanistan air base

By

Published : Dec 11, 2019, 4:41 PM IST

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அடுத்த பக்ரம் விமானப்படை தளம் அருகே புதிதாக மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டுவருகிறது.

இந்த மருத்துவமனையைக் குறிவைத்து இன்று காலை தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியது. சக்திவாய்ந்த வெடிகுண்டு வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் உயிர்ச்சேதங்கள் ஏதும் ஏற்படாத போதிலும், மருத்துவமனை பலமாகச் சேதமடைந்துள்ளது.

தற்கொலைப்படை தாக்குதல் நடந்த இடம்
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தப் பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.18 ஆண்டுகளாக உள்நாட்டுப் போரால் உழன்று கிடக்கும் ஆப்கானிஸ்தானில் தலிபான், ஐ.எஸ். ஆகிய பயங்கரவாத அமைப்புகள் தொடர் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டுவருகின்றன.

இதையும் படிங்க : ஒளியால் பிரகாசம் அடைந்த தமிழ்நாடு... கார்த்திகை தீபத்திருநாள் கோலாகல கொண்டாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details