தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஆப்கனில் குண்டுவெடிப்பு: குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு - ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போர்

காபூல்: ஆப்கானிஸ்தானில் நங்கர்ஹார் மாகணத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் குழந்தைகள் உட்பட பத்து பேர் உயிரிழந்தனர்.

trump

By

Published : Oct 8, 2019, 8:08 AM IST

ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் அமைந்துள்ளது ஜலாலாபாத் நகரம். எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் இந்நகரங்களில் நேற்று மிகப் பெரிய பயங்கரம் அரங்கேறியது.

வெடிகுண்டு பொருத்தப்பட்ட ரிக்ஷா ஒன்று, அரசுப் படைகளுடன் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் மீது மோதி வெடித்தது. இதில், குழந்தைகள் உட்பட பத்து பேர் உயிரிழந்தனர். மேலும், 27 பேர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் கூறுகையில், "இந்தச் சம்பவத்தில் காயமான சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்" என்றது. இந்தத் தாக்குதலுக்கு எந்த இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. ஆப்கானிஸ்தானில் கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: ஆப்கானில் அரசுப்படை-தலிபான்கள் தாக்குதல்: 50 அப்பாவிகள் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details