தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஆப்கான் அதிபர் பதவி விலக முடிவு? - ஆப்கான் அதிபர்

ஆப்கானிஸ்தான் காபூலைச் சுற்றியுள்ள பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், ஆட்சியை தலிபான்களுடன் ஒப்படைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், கூடிய விரைவில் ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி பதவியில் இருந்து விலகி ஆட்சியை தலிபான்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Afghan Prez Ashraf Ghani under growing pressure to resign
ஆப்கான் அதிபர் பதவி விலக முடிவு?

By

Published : Aug 15, 2021, 5:45 PM IST

காபூல்:ஆப்கானிஸ்தான் அரசு கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை தலிபான்கள் வேகமாக கைப்பற்றிவருகின்றனர்.

வடக்கு ஆப்கானிலுள்ள நாட்டின் நான்காவது பெரிய நகரமான மஷார்-ஐ-ஷெரீப் பகுதியை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அஷ்ரப் கானி நேட்டோ படைத் தளபதிகளுடனும், ஆப்கான் உயர் அலுவலர்களுடனும் நாட்டின் பாதுகாப்பு குறித்த அவசரக்கூட்டத்தை கூட்டினார்.

காபூல் மீது தாக்குதல் இல்லை என தலிபான்கள் திட்டவட்டம்

இதன்பிறகு பேசிய அஷ்ரப் கானி, 'மக்கள் இடப்பெயர்வு, வன்முறையைக் கட்டுப்படுத்த ஆப்கான் பாதுகாப்பு படைகள் நடவடிக்கை எடுக்கும்’ என்றார்.

இதனிடையே, தலிபான்கள் காபூலைச் சுற்றியுள்ள பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். இருப்பினும், காபூல் மீது தாக்குதல் நடத்தி கைப்பற்றப்போவதில்லை என்றும், ஆனால், தங்கள் படைகள் காபூல் எல்லையிலேயே இருக்கும் எனவும் தெரிவித்தனர்.

இந்தச்சூழ்நிலையில், ஆட்சியை தலிபான்களுடன் ஒப்படைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், கூடிய விரைவில் அஷ்ரப் கானி பதவியில் இருந்து விலகி ஆட்சியை தலிபான்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:காபூலைச் சுற்றி வளைத்த தலிபான்கள்

ABOUT THE AUTHOR

...view details