நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள மசூதியில் இன்று அதிகாலை மர்மநபர் ஒருவர் திடீரென புகுந்து தொழுகை நடத்தியவர்கள் மீது தனியாங்கி துப்பாக்கி மூலம் தாக்குதல் நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
மசூதியில் புகுந்து மர்மநபர் துப்பாக்கிச் சூடு - 9 பேர் பலி - துப்பாக்கிச் சூடு
நியூசிலாந்து: மசூதியில் புகுந்து மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒன்பது பேர் இறந்ததாக நியூசிலாந்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அந்நாட்டு போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் தாக்குதலில் ஈடுபட்ட மர்மநபர் கருப்பு உடை மற்றும் ஹெல்மெட் அணிந்திருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்கு அருகில் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் தங்கிருந்த ஓட்டல் இருந்ததாகவும், அங்குதுப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.