கடந்த மாதம் 16 ஆம் தேதி சீனாவின் ஹேயூஹான் நகரில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்-ல் லீ என்ற பெண் பணம் எடுத்துள்ளார். அப்போது அங்கு நுழைந்த மர்ம நபர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் உள்ள பணத்தை பிடிங்கிக்கொண்டார். மீண்டும் அந்த பெண்ணை மிரட்டும் அந்த நபர், வங்கிக்கணக்கில் உள்ள மீதிப்பணத்தையும் எடுத்துத் தரக்கோரி கேட்கிறார்.
நெகிழச் செய்த திருடன் - சீனாவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் - returned
ஹேயூஹான்: ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்த பெண்ணிடம் கத்தியை காட்டி பணத்தை பறித்த திருடன் மனம் மாறி அப்பெண்ணிடம் அதனை திரும்ப ஒப்படைத்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
வங்கி கணக்கில் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதையும் காட்டச் சொல்கிறார். அவசரம் அவசரமாக லீ தனது வங்கிக்கணக்கு இருப்புதொகையை காட்ட லீயின் வங்கிக் கணக்கில் பணமே இல்லை என ஏடிஎம் இயந்திரம் காட்டுகிறது.வங்கிக்கணக்கில் பணமில்லாததை அறிந்த அந்த மர்ம நபர், மனம் மாறி தான் பறித்த பணத்தை மீண்டும் அந்த பெண்ணிடமே ஒப்படைத்துவிட்டு சிரித்தபடியே அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறார்.
ஏடிஎம்மில் உள்ள சிசிடிவியில் பதிவான இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 'இவர் ஒரு நல்ல திருடன்' என்றும், 'இரக்க குணம் படைத்த திருடன்' என்றும் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இருந்தாலும் சிசிடிவி பதிவை வைத்து அந்த மர்ம நபரை சீன காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.