ஐநா பாதுகாப்பு சபையில் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய வல்லரசு நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஐந்து தற்காலிக உறுப்பு நாடுகள் இந்த சபைக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஐநா பாதுகாப்பு சபையில் இந்த உறுப்பு நாடுகள் இரண்டு ஆண்டுகள் உறுப்பினர்களாக நீடிக்கும்.
இந்தியாவுக்கு ஆசிய பசிபிக் நாடுகள் ஆதரவு கரம்!
ஐநா பாதுகாப்பு சபை தற்காலிக உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிட, 55 ஆசிய பசிபிக் நாடுகள் ஏகமனதுடன் இந்தியாவை முன்மொழிந்துள்ளன.
unsc
இந்நிலையில், அடுத்த ஆண்டிற்கான தற்காலிக உறுப்பினர் தேர்தலில் போட்டியிட, சீனா, பாகிஸ்தான், இலங்கை, ஜப்பான், சவுதி அரேபியா, மாலத்தீவு உள்ளிட்ட 55 ஆசிய-பசிபிக் நாடுகள் இந்தியாவை ஏகமனதுடன் முன்மொழிந்துள்ளன.