சர்வதேச மகளிர் நாளை முன்னிட்டு யுனிசெஃப் வெளியிட்டுள்ள புதிய ஆய்வின்படி, இந்தியா உள்பட ஐந்து நாடுகளில் உள்ள மொத்த குழந்தைகள் எண்ணிக்கைகளில் 50 விழுக்காடு நபர்களுக்கு சிறு வயதிலேயே திருமணம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
உலகளவில், இன்று 65 கோடி சிறுமிகளுக்கு குழந்தைப் பருவத்திலேயே திருமணம் நடைபெற்றுள்ளது. அவர்களில் பாதி பேர் வங்கதேசம், பிரேசில், எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
இது குறித்துப் பேசிய யுனிசெஃப் நிர்வாக இயக்குநர் ஹென்றிட்டா ஃபோர், "விரைவில் கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவந்தவுடன், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். பலவிதமான விழிப்புணர்வு, மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும்.
விரிவான சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்களுக்கு எடுத்துரைப்பதன் மூலம் குழந்தைத் திருமண அபாயத்தைக் குறைத்திட முடியும். மேலும், கடந்த தசாப்தத்தில் 25 மில்லியன் குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன" எனத் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவில் 1992-93, 2015-16ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், குழந்தைத் திருமணம் 54 விழுக்காட்டிலிருந்து 27 விழுக்காடாகக் குறைந்துள்ளது. ஆனால், தற்போதைய காலகட்டத்தில் மீண்டும் எண்ணிக்கை விகிதம் அதிகரித்துள்ளது.
குடும்ப வறுமையின் காரணமாகவே, சிறுமிகளுக்குச் சிறிய வயதிலேயே திருமணம் நடைபெறுகிறது. மேலும், பல பெற்றோர்களுக்கு அது குறித்து புரிதல் இல்லை. இதனைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் யுனிசெஃப் தற்போது ஈடுபட்டுவருகிறது.
இதையும் படிங்க:நிறவெறி சர்ச்சையில் இங்கிலாந்து அரச குடும்பம்-மேகன் மெர்கல் கண்ணீர் பேட்டி