இந்தோனேஷிய பாலி தீவில் ஞாயிறன்று 6.6 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, நேற்றைய தினம் (திங்களன்று) 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பாலி தீவில் 3ஆவது முறையாக நிலநடுக்கம்; அச்சத்தில் உறைந்த மக்கள்! - indonesia
ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் பாலி தீவில் 5.7 ரிக்டர் அளவில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அம்மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
அடுத்தடுத்த, இந்த இரண்டு நிலநடுக்கங்களால் மக்கள் அதிர்ந்துபோய் இருந்த சூழலில், இன்று மீண்டும் 5.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை சரியாக 8.18 மணிக்கு, பாலியின் தென்மேற்கு பகுதியில் 91.6 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், கடுமையான சேதங்களை ஏற்படுத்தி உள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, குடியிருப்பு பகுதிகள் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளன. எனினும்,சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. அடுத்தடுத்த நாட்களில், தொடர்ந்து மூன்றாம் முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் கடுமையான இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.