சீனாவின் தென்-கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி பிராந்தியமான குவாங்ஜி ஸுவாங்-கில் (Guangxi Zhuang) இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீனா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 5.2ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கமானது யூலின் நகருக்கு அருகே சுமார் 10 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டதாக ஜிங்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.