பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் கைபர் பக்துன்வா மாகாணம் அமைந்துள்ளது. அங்குள்ள கோஹட் என்னும் நகரில் நீர் தேக்கத் தொட்டி புதிதாகக் கட்டப்பட்டது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக அந்த தொட்டி இடிந்து விழுந்ததில் ஐந்து குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த நான்கு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
நீர் தேக்கத் தொட்டி இடிந்து விழுந்ததில் 5 குழந்தைகள் பலி! - water tank collapese
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் புதிதாகக் கட்டப்பட்ட நீர் தேக்கத் தொட்டி இடிந்து விழுந்ததில் 5 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீர் தேக்கத் தொட்டி இடிந்து விழுந்ததில் 5 குழந்தைகள் பலி
இதில், இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.