ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்ப வேண்டுமென அமெரிக்க அலுவலர்கள் தலைமையில் தலிபான் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் தலிபான் பயங்கரவாத அமைப்பு பல்வேறு தாக்குதல்களை நடத்தி அட்டுழியத்தில் ஈடுபட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான் அட்டுழியம்; அப்பாவி மக்கள் பலி!
காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் நான்கு பேர் கொல்லப்பட்டனர். 36 பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், ஃபர்யாப் மாகாணத்தின் வடக்கு பகுதியிலுள்ள அங்காடி ஒன்றில் தலிபான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தினர். உள்ளூர் நேரப்படி சரியாகக் காலை 6.40 மணிக்கு ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில், அப்பாவி மக்கள் நான்கு பேர் பலியாகியுள்ளதாகவும், 36 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜூன் மாதம், இரண்டாம் தேதி காபூலில் நடத்தப்பட்ட தாக்குதலில் 68 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.