பெஷாவர்:பாகிஸ்தான் நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள பெஷாவர் நகரின் மசூதி ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்று வந்தது. அதில் அதிக அளவிலான மக்கள், தொழுகையில் ஈடுபட்டு வந்த நிலையில், திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பில், சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், 50க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பெஷாவரின் கிஸ்ஸா க்வானி பஜார் பகுதியில் உள்ள ஜாமிய மசூதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக அலுவலர்கள் கூறியுள்ளனர். இதுவரை எந்த பயங்கரவாத அமைப்புகளும் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை.