இரண்டு நாள்களுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டி போட்ட மோலேவ் சூறாவளியின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் ஒரே இரவில் வெளியேற்றப்பட்டனர். சுமார் 125 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால், ஏராளாமான மரங்கள், மின் கம்பங்கள் கீழே விழுந்தன. இதனை சீரமைக்கும் பணியில் பிலிப்பைன்ஸ் நாட்டு அரசு அலுவலர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் மோலேவ் சூறாவளி பாதிப்பு: 3 பேர் உயிரிழப்பு - பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டி போட்ட மோலேவ் சூறாவளி
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டிப்போட்ட மோலேவ் சூறாவளியில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 13 மீனவர்கள் திரும்பி வராத நிலையில், அதில் மூன்று பேர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள நபர்களை பிலிப்பைன்ஸ் கடலோர படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கிடைத்த தகவலின்படி, இதுவரை 9 லட்சத்து 14 ஆயிரத்து 709 நபர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் இந்தாண்டு பிலிப்பைன்ஸை தாக்கிய 17ஆவது சூறாவளி மொலேவ் ஆகும்.
ஆண்டுதோறும் சுமார் 20 சூறாவளி மற்றும் புயல்களை சந்திக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டில், நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பும் அவ்வப்போது நடைபெறும். உலகின் மிக பேரழிவுக்குள்ளான நாடுகளில் பிலிப்பைன்ஸ் நாடும் ஒன்றாகும்.