இலங்கையில் ஒரு கிலோ வெடிபொருட்களுடன் 3 பேர் கைது - இலங்கை குண்டுவெடிப்பு
2019-04-27 07:59:08
இலங்கை: இலங்கை வெள்ளவத்தை ரயில் நிலையம் அருகே ஒரு கிலோ வெடிப்பொருட்களுடன் 3 பேர் பிடிபட்டனர்.
இலங்கையில் ஒரே நாளில் எட்டு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள், உலகத்தையே உலுக்கியுள்ளது. சர்ச்சுகள், ஹோட்டல்கள் என மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து வெடுகுண்டு தாக்குதல்கள் நடந்தன. இதில் 253 உயிரிழந்தனர். படுகாயமடைந்த 500க்கும் மேற்பட்டோர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையில் இந்த சம்பவம் தொடர்பாக 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இலங்கை வெள்ளவத்தை ரயில் நிலையம் அருகே காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு கிலோ வெடிப்பொருட்களுடன் மூன்று பேர் பிடிப்பட்டனர். மூன்று சக்கர வாகனத்தில் சி-4 என்ற வெடிபொருளுடன் இருந்த அவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.