தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சீனாவின் நிலக்கரிச் சுரங்கத்தில் விபத்து: 23 பேர் மரணம், ஒருவர் உயிருடன் மீட்பு

சீனாவின் யோங்சுவான் மாவட்டத்தில் மூடப்பட்ட டயோஷிடோங் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட கார்பன் மோனாக்சைட் கசிவினால், பணியில் ஈடுபட்டிருந்த 24 ஊழியர்களில் 23 பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

விபத்து
விபத்து

By

Published : Dec 6, 2020, 7:11 AM IST

சோங்கிங்: யோங்சுவான் மாவட்டத்தில் மூடப்பட்ட டயோஷிடோங் என்ற நிலக்கரிச் சுரங்கத்தில், நேற்று முன்தினம் (டிச. 04) 24 ஊழியர்கள் வேலை பாரத்துக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட கார்பன் மோனாக்சைட் கசிவால் 23 பேர் உயிரிழந்தனர்.

சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள யோங்சுவான் மாவட்டத்தில் உள்ள சோங்க்விங் மாகாணத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு டயோஷிடோங் என்ற நிலக்கரிச் சுரங்கம் மூடப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சுரங்கத்தின் 24 ஊழியர்கள் அடித்தளத்தில் இருந்த உபகரணங்களை அகற்றிக்கொண்டிருந்தபோது, கார்பன் மோனாக்சைட் கசிவு ஏற்பட்டது. இதனால் ஊழியர்கள் மூச்சுத்திணறி வெளியேற முடியாமல் தவித்தனர்.

இது குறித்து மீட்புப் படையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த மீட்புப் படையினர், ஒருவரை உயிருடனும், மேலும் உயிரிழந்த 23 பேரின் உடல்களையும் மீட்டனர்.

இந்தச் சம்பவம் மாலை சுமார் 5 மணியளவில் நடைபெற்றிருக்கக் கூடும் என்றும், இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்று விசாரணை நடைபெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இஸ்ரேலிய ஆயுதப்படை சுட்டுக் கொன்ற சிறுவனுக்கு அஞ்சலி செலுத்திய பாலஸ்தீனியர்கள்!

ABOUT THE AUTHOR

...view details