லாகூர் : பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் யார் கான் பகுதியில் விநாயகர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்குள் புகுந்த கும்பல் வன்முறையாளர்கள் கோயிலை அடித்து நொறுக்கி தாக்குதல் நடத்தினார்கள்.
இது தொடர்பாக காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன. இந்தத் தாக்குதலை கண்டித்து இந்தியா, அந்நாட்டின் தூதருக்கு சம்மன் அனுப்பியிருந்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலும் கோயில் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும்., இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைதுசெய்யப்படுவார்கள் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் காணொலியில் தோன்றும் நபர்களை முதலில் கைதுசெய்யும் பணியில் காவலர்கள் ஈடுபட்டனர். அதன்படி முதல்கட்டமாக 20 பேர் பஞ்சாப் மாகாண காவலர்களால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.