தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நேபாளத்தில் பேருந்து விபத்தில் 14 பேர் உயிரிழப்பு - பலர் காயம்! - 14 people died in nepal bus accident

காத்மண்டு: நேபாளத் தலைநகரான காத்மண்டுக்குச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்த நிலையில், பலர் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

bus accident
14 பேர் உயிரிழப்பு -

By

Published : Dec 15, 2019, 3:32 PM IST

நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுக்கு, பிரபல சுற்றுலாத் தலமான டோலகா கலிஞ்சோவிலிருந்து 32 பயணிகளுடன் கடந்த சனிக்கிழமை பேருந்து சென்றுள்ளது. அப்போது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், " பேருந்தில் குறைந்தது 32 பேர் பயணம் செய்துள்ளார்கள். இந்த விபத்துக்கு காரணமான ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறோம் “ என்றார்.

மேலும், அதிக பயணிகளை கொண்ட வாகனங்கள், மோசமாக பராமரிக்கப்படாத சாலைகள், பொது வாகனங்களின் மோசமான நிலைமைகள் ஆகியவற்றால் நேபாளத்தில் அதிகப்படியான விபத்துகள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சென்னையில் கஞ்சா விற்பனை - 4 பேர் கைது, ஒருவருக்கு வலைவீச்சு!

ABOUT THE AUTHOR

...view details