தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சீனாவில் பயங்கர நிலநடுக்கம்! 11 பேர் பலி - நிலநடுக்கம்

பெய்ஜிங்: சீனாவில் நேற்றிரவு நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்

By

Published : Jun 18, 2019, 10:36 AM IST

சீனாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள சிச்சுவான் மாகாணத்தில் நேற்றிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தில் இதுவரை சுமார் 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 122 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகிவுள்ளன.

சீன நிலநடுக்க ஆய்வு மையத்தின் தகவல்களின்படி, இந்த நிலநடுக்கமானது சிச்சுவான் என்ற பகுதியில் நேற்றிரவு 10.55 மணிக்கு சுமார் 15 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் சீனாவின் பல முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன எனத் தெரியவந்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி

சீனாவின் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சகம் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details