காபூல்:ஆப்கானிஸ்தான் நாட்டின் முக்கிய நகரங்களான லஷ்கர் காஹ்,குண்டூஸ், தலுகான், ஷிபர்கன் உள்ளிட்ட பகுதிகளில், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்றுவருகிறது. பல்வேறு நகரங்களை தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டனர்.
ஆப்கான் பயங்கரவாத மோதல்: ஒரே நாளில் 11 பேர் கொலை - ஆப்கான் தாக்குதல்
ஆப்கானிஸ்தான் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதல் காரணமாகக் குடிமக்களில் 11 சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். 64 பேர் படுகாயமடைந்தனர்.
Afghanistan battles
இதில், குண்டூஸ், அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் மட்டும் ராணுவத்தினர் பயங்கரவாதிகள் மோதல் காரணமாகக் குடிமக்கள் 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 64 பேர் படுகாயமடைந்தனர். அத்துடன் குண்டூஸ் மோதலில் 47 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆப்கான்: 24 மணி நேரத்தில் 94 தலிபான், அல்கொய்தா பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!