தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கொரோனாவுக்கு குட்பை சொன்ன 100 வயதான முதியவர்!

வுஹான்(சீனா): கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்த 100 வயதான முதியவர், மருத்துவரின் தீவிர சிகிச்சையில் குணமடைந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

coronavirus
கொரோனா வைரஸ்

By

Published : Mar 9, 2020, 10:31 AM IST

ஆட்டம் காட்டிவரும் கொரோனா வைரஸால் சீனாவில் மட்டுமே மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 100 வயதான முதியவர் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்ததன் மூலம் கொடிய வைரஸை வென்ற வயதான நோயாளி என்ற புதிய பெருமையை பெற்றுள்ளார்.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் பிப்ரவரி 24ஆம் தேதியின்று, ஹூபேயின் மகப்பேறு மற்றும் குழந்தை நல மருத்துவமனையில் 100 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அனுமதிக்கப்பட்டார்.

இவருக்குக் கொரோனா பாதிப்பு உறுதியடைந்ததால் தீவிர மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் மட்டுமின்றி அல்சைமர், உயர் ரத்த அழுத்தம், இதயத்தில் பிரச்னை போன்ற பல நோய்களும் முதியவருக்கு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, 13 நாள்கள் மேற்கொண்ட தீவிர சிகிச்சையில் முதியவர் முழுமையாகக் குணமடைந்திருப்பதால் மருத்துவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இவருக்கு வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், பிளாஸ்மா பரிமாற்றம் (plasma transfusion),பாரம்பரிய சீன மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன்.

இதையும் படிங்க:இத்தாலியில் ஒரே நாளில் 133 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details