காபூல்: இன்று (டிசம்பர் 31) காலை 8.10 மணியளவில் செகல் சுடூன் பகுதியில் காரில் குண்டு வெடித்தது என காவல்துறையினர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காபூல் குண்டுவெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம் - குண்டுவெடிப்பு
அதிபர் மாளிகையில் பணிபுரிபவர் காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில், ஒருவர் உயிரிழந்ததாகவும், இருவர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Kabul blast
இந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார், இருவர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டு வைக்கப்பட்டிருந்த கார், அதிபர் மாளிகையில் பணிபுரிபவருடையது என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அதிபர் மாளிகையில் இருந்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்கவில்லை.