வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசத்திற்கு பல திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடியின் வருகைக்கு சீன அரசு எதிர்ப்பு தெரிவித்தது.
மோடி வருகைக்கு சீனா எதிர்ப்பு! - மோடி
பெய்ஜிங்: பிரதமர் மோடி வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேச வருகைக்கு சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
modi
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ராணுவங்களுக்கு இடையேயான சண்டை மற்றும் எல்லைப் பிரச்னைகளை தவிர்க்கவும், இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மட்டுமே சீன அரசு விரும்புகிறது' என தெரிவித்துள்ளது.
சீனாவின் எதிர்ப்புக்கு மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்த பதிலும் தெரிவிக்காதது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.